திங்கள், 26 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1058


திருக்குறள் -சிறப்புரை :1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.---- ௧0


         இரப்பவர்கள் இல்லாது போனால், ஈரம் செறிந்த இந்நிலவுலகில்வாழும் மக்கள், உயிரற்ற மரப்பாவை போல, ஈரமற்ற நெஞ்சினராய், உணர்ச்சியற்ற உடல் சுமந்து போவதும் வருவதுமாய்த் திரிவர்.

“ எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.” ---இனியவை நாற்பது.

எள் அளவாயினும் பிறர் இரவாது, தானே முன்வந்து ஈதல் எல்லாவகையிலும் மிக இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக