திருக்குறள் -சிறப்புரை
:1045
நல்குரவு என்னும் இடும்பையுள்
பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். --- ௧0௪௫
வறுமை என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்துள் , பசி, பிணி, இழிசொல்,
பழிச்சொல் போன்ற இன்னபிற துன்பங்களும் வந்துசேரும்.
” இல் உணாத் துறத்தலின்
இல் மறைந்து உறையும்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல்மாண்
பால் இல் வறுமுலை சுவைத்தனன்
பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து
அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம்
காட்டியும்
நொந்தனளாகி……”
-----புறநானூறு.
எனது இல்லம் உண்ணப் படுவனவற்றைக் கைவிடுதலால், அவ்வில்லத்தை இகழ்ந்து
நினையாது உறைகின்றாள் ; புல்லிய உளை மயிர் போலும் குடுமியையையுடைய இளம் புதல்வன் பலபடியாகப்
பால் இல்லாத வறிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி,
உள்ளே ஒன்றிமில்லாத வறிய சோற்றடு கலத்தைத் திறந்து பார்த்து, அங்கே உணவைக் காணாது வருந்தி
அழுகின்றான் ; அதனைப் பார்த்து அவன் அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது
என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலாவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது மிகவும்
வருந்தினாள் என் மனைவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக