ஞாயிறு, 4 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1040


திருக்குறள் -சிறப்புரை :1040

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.---- ௧0௪0

எம்மிடத்தில் ஒரு பொருளும் இல்லை என்று சோம்பித் திரிவாரைக் கண்டால் உயிர்களுக்கு உணவளிக்கும் நல்ல நிலமாகிய இயற்கை அன்னை நாணித் தன்னுள் நகைப்பாள்.

”கார் நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
 பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்காதே.” – ஏரெழுபது.

“பசியும் பிணியும் நீங்கி. வசியும் வளனும் சிறக்க,” வேண்டுமெனில் உழவர்களின் ஏர் நடக்க வேண்டும் என்று கம்பர் விரித்துரைக்கின்றார்.

 மழை தவறாது பொழிய வேண்டுமானால் உழவர்கள் உழு தொழிலைப் போற்ற வேண்டும். நாட்டில் பயிர்த் தொழில் சிறக்குமானால், மொழி வளம் பெறும்; முத்தமிழ் தழைத்தோங்கும்; மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர் ; எல்லாரும் எல்லாமும் பெற்றுச் சிறப்புறுவர் ; உயர்ந்தோர் போற்றும் அறம் சிறந்து விளங்கும்; பசிப்பிணி ஒழியும்  ; நாட்டு மக்கள் நலுமும் நற்காப்பும் பெறுவர்;.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக