திருக்குறள் -சிறப்புரை
:1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. ------ ௧0௫௭
(இகழ்ந்து எள்ளாது)
தம்முன் இரந்து நிற்பாரை இகழாது, எள்ளி நகையாடாது கொடுத்து மகிழ்வாரைக்
கண்டால் இரப்பவரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவக்கும்.
“இலம்படு புலவர் ஏற்றகைந்
நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழல்
தொடித் தடக்கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய்
வளம் பழிநி.” –மலைபடுகடாம்.
நன்னனே..! இல்லாமையால் வருந்தும் புலவர்தம் ஏந்தும் கைகள் நிறையும்படியாக
உன் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ்செல்வம், கெடுதல் இல்லாது, வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக