திருக்குறள் -சிறப்புரை
:1056
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.---- ௧0௫௬
பிறருக்கு வழங்கும் அளவுக்கு மிகுபொருள் கொண்டோர், தம் பொருளை மறைத்து
வைக்கும் குற்றம் இல்லாரைக் கண்டால், இரந்து வாழ்வோரின் வறுமைநோய் எல்லாம் ஒருங்கே
அழிந்துபோகும். பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாகும் என்பதாம்.
“ இரவலர் புரவலை நீயும்
அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும்
அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி
இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்…….”
----புறநானூறு.
தலைவனே…! இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயும் அல்லை ; பொருள்தந்து
பாதுகாக்கும் புரப்போர் இரப்போர்க்கு இல்லாமல் போய்விடவில்லை ; இனி இரப்போர் இருத்தலையும்
காண்பாயாக ; இனி இரப்போர்க்குக் கொடுப்போர் உண்டாதலையும் காண்பாயாக.
நன்று
பதிலளிநீக்கு