திங்கள், 12 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1048


திருக்குறள் -சிறப்புரை :1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.----- ௧0௪௮

நேற்று எம்மைக் கொல்வது போல, வருத்திய வறுமைத் துன்பம்   இன்றும் வந்துசூழ்ந்து வருத்துமோ..? என்று கலங்குவர் வறுமையுற்றோர்.

“தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்…..” ---அகநானூறு.

வறுமையுற்றோர்,  தம்மை விரும்பி வாழ்வோரைப் பாதுகாத்துத் தாம் விரும்பிய இனிய சுற்றத்தோடு இன்பம் மிகும்படி மகிழ்ந்திருத்தல் இயலாது வருந்துவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக