வியாழன், 22 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1054


திருக்குறள் -சிறப்புரை :1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.---- ௧0

தம்மிடம் இருப்பதைக் கனவிலும் மறைத்தறியாரிடம் சென்று இரத்தலும் பிறருக்குக் கொடுத்து மகிழும் வாய்ப்பினைப் பெற்றதாகவே கருதுவர்.

“இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி …” ----அகநானூறு.

தோழி..! பொருள் வேண்டி வருவாரது ஏந்திய கை நிறைந்திட, வள்ளல்கள் வருத்தம் இல்லாத உள்ளத்துடன் விரைந்து வந்து புதிய பொருள்களைத் தந்து மகிழ்வதற்குரிய அரிய பொருள் ஈட்டிவர விரும்பிச் சென்றாரே தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக