சனி, 3 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1039


திருக்குறள் -சிறப்புரை :1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.----- ௧0௩௯

 உழவன் தனக்குரிய நிலத்தை நாள்தோறும் சென்று  பயிரின் நலம் கண்டு  வரல்வேண்டும் அவ்வாறு செல்லாமல் இருப்பானேயாகில் கணவன் மனைவியிடத்துப்  பாராமுகமாக இருந்தால் கணவனின் அன்புக்கு ஏங்கிய மனைவி ஊடல் கொள்வதைப்போலப் பயிரும் வாடி வளம் குன்றிப்போகும்.

“ஏரும் இரண்டு உளதாய் இல்லத்தில் வித்து உளதாய்
நீரருகே சேர்ந்த நிலம் உளதாய் –ஊரருகே
சென்று வர எளிதாய்ச் செய்வோரும் சொற் கேட்கில்
என்றும் உழவே இனிது. – ஒளவையார் : தனிப்பாடல்.

உழவுத்தொழில் சிறந்து விளங்க, பின்வரும் ஐந்து வாய்ப்புகளும் நன்றாய் அமைதல் வேண்டும்.

1.இரண்டு ஏர்கள் இருத்தல் வேண்டும்.

2.இல்லத்தில் விதை இருப்பில் இருக்க வேண்டும்.

3.நீர் நிலைகள் (கொள்ளவும் வடியவும்) அருகே இருத்தல் வேண்டும்.

4.விளை வயலுக்கு எளிதாய்ச் சென்றுவர இல்லம் இருத்தல் வேண்டும்

5.வேலைகளைக் கேட்டுச் சொன்னபடி செய்யும் பணியாளர்கள் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக