சனி, 17 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 55 : 17. நரை (Grey hair )

தொல்தமிழர் அறிவியல் – 55 : 17. நரை (Grey hair )

17. நரை (Grey hair )

யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு  மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
                                                         பிசிராந்தையார், புறநா. 191


                           நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படியாயினீரெனக் கேட்பீராயின், என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார் ; யான் கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல் செய்வாரும் ; அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும் ; அதற்குமேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினையுடைய சான்றோர் பலராதலான்.

                     நரை தோன்றாமைக்குரிய காரணங்களை விரித்துரைக்கும் பிசிராந்தையார், தான் எல்லா நலன்களும் பெற்றுக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால்  இளமை கழிந்துஆண்டுகள் பல சென்ற போதும் தனக்கு நரை தோன்றவில்லை என்று கூறுகின்றார்.

அறிவியல் நோக்கு

SCIENTIFIC AMERICAN

Fact or Fiction?: Stress Causes Gray Hair

Scientists have a hunch that the gray hairs we dread (or welcome) may arrive sooner with stress

Extremely unlikely, scientists say, but stress may play a role in a more gradual graying process……………….

And general practice physicians have observed accelerated graying among patients under stress, says Tyler Cymet, head of family medicine at Sinai Hospital in Baltimore, who conducted a small retrospective study on hair graying among patients at Sinai. "We've seen that people who are stressed two to three years report that they turn gray sooner," he says.-----தொடரும்...

1 கருத்து: