சனி, 30 செப்டம்பர், 2017

நரை (Grey hair )

நரை (Grey hair )
யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு  மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
                                                         பிசிராந்தையார், புறநா. 191

                           நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படியாயினீரெனக் கேட்பீராயின், என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார் ; யான் கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல் செய்வாரும் ; அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும் ; அதற்குமேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினையுடைய சான்றோர் பலராதலான்.
                     நரை தோன்றாமைக்குரிய காரணங்களை விரித்துரைக்கும் பிசிராந்தையார், தான் எல்லா நலன்களும் பெற்றுக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால்  இளமை கழிந்து,  ஆண்டுகள் பல சென்ற போதும் தனக்கு நரை தோன்றவில்லை என்று கூறுகின்றார்.

அறிவியல் நோக்கு

SCIENTIFIC AMERICAN

Fact or Fiction?: Stress Causes Gray Hair

Scientists have a hunch that the gray hairs we dread (or welcome) may arrive sooner with stress

Extremely unlikely, scientists say, but stress may play a role in a more gradual graying process……………….
And general practice physicians have observed accelerated graying among patients under stress, says Tyler Cymet, head of family medicine at Sinai Hospital in Baltimore, who conducted a small retrospective study on hair graying among patients at Sinai. "We've seen that people who are stressed two to three years report that they turn gray sooner," he says.
                             மருத்துவர் டைலர் சைமெட் , ஆய்வறிக்கையின்படி  இளநரை தோன்றுவதற்கு மன அழுத்தம்,  அதனால் ஏற்படும் கவலை காரணம் எனக் கண்டறிந்துள்ளதை மேற்சுட்டிய மருத்துவ ஆய்வறிக்கையின் வழி அறிய முடிகிறது.
Greyness / hoariness  -
Premature graying of hair due to an erratic lifestyle and other factors is a huge cause of stress today
Trichologist Dr Sonal Shah, points out how, of late, women as young as 25 are worrying about graying early. "It's the same case for men," she says. She pegs it down to two major causes, "First is a faulty diet and second, mental worries. Lack of some B Vitamins, iron, copper and iodine in the daily diet are said to be contributory factors. Mental stress also produces extraordinary tension in the skin of the scalp, which interferes with the supply of nutrition necessary for good hair health. Apart from these, Premature graying is caused due to stress, anemia, poor scalp conditioning, abuse of hair as well as genetic conditioning." –(TOI…)
 இளமைக் காலத்திலேயே தோன்றும் நரையை இளநரை என்றும் பித்த நரை என்றும் கூறுவர்.ஆனால் பிசிராந்தையருக்கோ இளமை கழிந்து  வயது முதிர்ந்த நிலையிலும் நரை தோன்றவில்லை என்றதனால் கவலையற்ற வாழ்க்கைமுறையே காரணம் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவும் அக்கருத்தை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

“ Sangam poetry enumerates four reasons that are mental rather than physical to keep a man’s hair black. All the four involve stress-free mind rather than nutritious  good referred to, by dieticians.”  –Editor.

திருக்குறள் – சிறப்புரை : 666

திருக்குறள் – சிறப்புரை : 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். --- ௬௬௬
ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உள்ள உறுதிப்பாடு உடையவர்கள்  தாம்  எண்ணியவற்றை எண்ணியபடியே செய்து முடிப்பர்.
“ எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு.” –குறள்.467.

ஒரு செயலைத் தொடங்குமுன் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தொடங்க வேண்டும் ; தொடங்கிய பின்னர் எண்ணிப்பார்ப்பது என்பது குற்றமேயாகும். 

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

கொல்லும் சினம்

கொல்லும் சினம்
Anger kills
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (குறள்.305)
If thou wouldst fain protect thyself, do guard against thy spleen
If thou guardest not, thy own anger will destroy thee clean.
                                                                ( Tr.)  K.M.Balasubramaniam

“Angry people at increased risk of heart attacks–TOI- 5-3-14
London: Scientists have confirmed that hot-headed people with outbursts of anger are more prone to heart attacks, strokes and other cardiovascular problems in the two hours immediately afterwards. Five episodes of  anger a day would result in around 158 extra heart attacks per 10,000 people with a low cardiovascular  risk per year, increasing to about 657 extra heart  attacks per 10,000 among those with a high cardiovascular risk.
The Harvard School of Public  Health Researchers .
 “ This research found that people’s risk of heart attack and stroke increased for a short time after they lost their temper. It’s not clear what causes this effect. It may be linked to the physiological changes that anger causes to our bodies, but more research is needed to explore the biology behind this.”  
HOMOEOPATHY PHILOSOPHY
Constitution of the patient, his mind and temperament, occupation, mode of living and habits, social and domestic relations, age and sexual functions etc. give us individuality of the patient.( The Organon)
MIND: the ability to be aware of things and to think and reason, originating in the brain.
TEMPERAMENT: a person’s nature as it controls the way he or she behaves, feels, and thinks.
Thiruvalluvar proclaims ….. Anger kills.  Quite a few Thirukkurals amplify how anger affects  one’s mind and body and even prone to fatal.
CHAPTER – 31,  THE AVOIDANCE OF ANGER
அதிகாரம் – 31, வெகுளாமை
சினமென்னும்  சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (குறள்.306)
The wrath which is the killer of the men it doth embrace
Will burn their kinsmen too who are of raft-like helpful ways.
                                                                 ( Tr.) K.M.Balasubramaniam
சினம் என்னும் நெருப்பு சேர்ந்தாரைக் கொல்வதோடு அவருக்கு நட்பாக நின்று புணைபோலப் பயன்படுவாரையும் சுட்டெரித்துப் பிரித்துவிடும்.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (குறள். 304)
Because one’s anger slayeth one’s laughter and one’s cheer
Is  there a greater foe for one than one’s wrath to fear
                                                                   ( Tr.)  K.M.Balasubramaniam
முகத்தில் சிரிப்பையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று அழிக்கும் சினத்தைவிட ஒருவனுக்குத் தீமையைத் தரவல்ல வேறு ஒரு பகையும் உண்டோ..?
உள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (குறள்.309)
If he could but from whate’er thought of anger e’er refrain
The wishes all of his own heart will he at once attain.
                                                                  ( Tr.) K.M.Balasubramaniam
ஒருவன் தன் நெஞ்சினால் வெகுளாது பிறருடன் பழகிவந்தால் அவன் மனம் நினைத்ததையெல்லாம் எண்ணியவாறே பெறுவான்.
மன நலம்
மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் …. (457) என்ற உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் உளவியல் அறிஞர் திருவள்ளுவரே.  மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு ( 1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்கிறார் திருவள்ளுவர்.
 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
 ஆகுல நீர பிற. (34)
அறமாவது ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாயிருத்தலே மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)
பொறாமையும் ஆசையும் சினமும் கடுஞ்சொல்லும் இந்நான்கையும் விலக்கி நடத்தலே அறமாம். இஃது ஒன்றே மன அமைதிக்கான வழியாம். அல்லலுறும் மனம்,  உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.  பொறாமையால் பேராசையும் பேராசையால் சினமும் சினத்தால் சுடு சொற்களும் வெளிப்பட மனிதன் தன்னிலை இழக்கிறான், விளைவு குருதிக் கொதிப்பு, சினத்தால் சிவக்கும் கண்கள், இதயத் துடிப்பு மிகுதல், மயங்கி விழுதல்.. முடிவு மரணமே. வள்ளுவர் வாய்மொழியை வாழ்க்கை நெறி எனக் கொண்டு தன்னைத் தான் காத்துக் கொள்க.
The above couplets offer general guidance to save life. As the couplet goes,  prevention is better than cure.
We may find the main cause for the disorder / malfunction in a human body. According to Thiruvalluvar, one should rest one’s mind in peace; If one fails to do so , it is bound to  affect the  inner organs of the body.  As advised by Thiruvalluvar one should adopt ( avoid..?) a four-fold path; 1.Envy, 2.Greed, 3.Anger,  4. Harmful words. Envy lead to Greed, envy and greed lead to anger;  envy, greed and anger lead to outbursts of fury. This will lead to mental agony, hypertension, reddish eyes , increasing heart beats, giddiness, resulting in death.


அறிவியல் என்றால் என்ன….?

அறிவியல் என்றால் என்ன….?

தமிழை எங்குநோக்கினும் எப்படி நோக்கினும் அன்றுமுதல் இன்றுவரை – அடிமுதல் முடிவரை – கலையாக, கவிதையாக, வாழ்வியலாக அறிவியல் சிந்தனைகள் செறிந்து விளைந்து நிறைந்துள்ளதைக் காணலாம்.. திருக்குறளும் அப்படியே,  தொட்ட இடமெல்லாம்   திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனைத் தேன் துளிகள்  சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு விளையாடி, பொருளோடு  போராடி , காமத்தில் களிநடனமாடி  முப்பாலெனத் தமிழ்ப்பாலாகிய தாய்ப்பால் நல்கும் தமிழன்னையே, வரலாற்றால் தொடமுடியாத தொலைவில் நின்று அருள்புரியும் அன்னையே. தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும் ஈன்றபொழுது மகிழ்ந்தாயோ… சான்றோன் எனக் கேட்டபொழுது  பெரிது உவந்தாயோ..!                                
       
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.
                      எப்பொருள் எவ்வகைமைத்தாயினும் ;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின் இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும்  கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின் அரிச்சுவடி என்க.
“ Science – a branch of knowledge requiring systematic study and method – especially one of those dealing with substances ……..” – animal and vegetable life and natural laws……..”
பொருள் என்ற சொல்லுக்குத் தமிழ் அகரமுதலி – 23  பொருள் விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளது.
சொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை .
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு .

” Whatever be the apparent diversity of things it is wisdom
To analyses  and perceive the basic truth of the matter.”
The enlightened man who has true understanding, will be able to uncover the differing exteriors and lay bare the one central and immanent substance of all things of this world. Emerson’s concept of the ‘over soul’ based on the Upanishadic belief in cosmic unity conforms to Valluvar’s philosophy. And T.S. Eliot’s line, “ All things affirm thee in living”. Also echoes the same idea.

Valluvar does not believe in the mere acceptance of things only on the basis of tradition or sanctity. He wants the core of ultimate truth to be arrived at by going right behind appearances with vigorous use of reason.” ..(Tr.) Dr.S.M.Diaz.
                       அறிவியலின் அடிப்படை – இயற்கையின் இருப்பையும் இயக்கத்தையும் அறிவதே. தமிழரின் அறிவியல் அறிவு இயற்கையை (இருப்பை)அறிதல் இயற்கையோடு இயைந்து(இயக்கத்தை) வாழ்தல். இவ்வகையில் மனித இனத்தின் நேரிய வாழ்வை நெறிப்படுத்தினர். இஃது தமிழரின் அகவாழ்க்கையை அறிவியல் படுத்தியது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது புறவாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றன.                                       வானூர்தியும் கணினியும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; உண்மையும் ஒழுக்கமும் இல்லாமல் மனிதனாக வாழ முடியாது. அறிவியலற்ற அகவாழ்க்கை அமைதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். உலகின் இன்றைய நிலையை உற்றுநோக்குங்கள்- மனநோயாளிகள் கையில் மனிதம் அழிக்கும் நவீன ஆயுதங்கள். “” Arts without science  - useless ; Science without arts -- dangerous .”” ---           ”’ புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் முந்தைய கண்டுபிடிப்புகளிடம் மன்னிப்புக் கோரி நிற்கின்றன”” என்ற கூற்றிற்கிணங்க அறிவியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் திருவள்ளுவர் – அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்று வளரும் அறிவு முதிர்ச்சி அறிவியலின் வளர்ச்சியாவதைக் குறிப்பிடுகின்றார்.
Editorial
                             “ Refer the couplet number 355 from Thirukkural, an outstanding ethical treatise in Tamil. In a cursory glance, the poem may seem to give a mere definition for knowledge ‘Arivu’ in Tamil. It one probes into the poem he wiil be able to understand that it embraces not only the concept such as knowledge  but also science, truth, idea and news.

 In the word ‘Science’ is defined as a branch of knowledge dealing with substances, living and non-living things, it is exactly the Kural quoted above says. Hence it is to be remembered that science was not alien to the ancient Tamils. They were  very well aware of what science is and what are its characteristics.” –Editor.

திருக்குறள் – சிறப்புரை : 665

திருக்குறள் – சிறப்புரை : 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். --- ௬௬௫
செயல்திறனால் சிறப்பு எய்திப் பலராலும் புகழப்பெற்ற அமைச்சரின் செயலாற்றல்  அரசனுக்கு ஆக்கமும் புகழும் உண்டாக்குவதால்  அமைச்சரை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.
“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
 அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
 பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்.” –மதுரைக்காஞ்சி.

அமைச்சர் பெருமக்கள், நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமைகளை விலக்குவர் ; அன்பும் அறமும் எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காது பாதுகாப்பர்; பழியிலிருந்து நீங்கி உயர்ந்து விளங்குவர் ; எங்கும் பரவிய புகழால் நிறைந்தவர் ; செம்மை சான்றவர்; அரசனால் காவிதிப் பட்டம் பெற்றவர்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 664

திருக்குறள் – சிறப்புரை : 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். --- ௬௬௪
இந்தச் செயலை இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்வது யார்க்கும் எளிய செயலே ஆனால், செல்லிய வண்ணம் செயலாற்றல் என்பது அரிய செயலாகும்.
“ மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
  சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” –நாலடியார்.
 மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கம் இல்லாமல்  தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.


புதன், 27 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 663

திருக்குறள் – சிறப்புரை : 663
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். --- ௬௬௩
ஒரு செயலச் செய்து முடிக்கும்வரை அச்செயலின் நுட்பங்களைப் பிறர் அறியாதவாறு காத்து, அச் செயல் முடிந்தபின்னே  வெளிப்படுத்துவதே செயல்திறன் ஆகும்; அங்ஙனமின்றி இடையிலேயே தொழில்நுட்பம் வெளிப்படுமானால் அஃது அவனுக்குத் தீராத துன்பத்தைத் தரும்.
“ கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
  அற்றம் முடிப்பான் அறிவுடையான்…” –பழமொழி.

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல்திறனில் சிறந்து, தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 662

திருக்குறள் – சிறப்புரை : 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ---- ௬௬௨
செயலாற்றுங்கால்,  இடையூறு வாராமல் காத்துக் கொள்வதும் இடையூறு வந்தவிடத்து மனம் தளராமல் முயற்சி செய்தலும் ஆகிய இவ்விரு நெறிகளே வினைத்திட்பமாகும் என்பது ஆராய்ந்து அறிந்த சான்றோர் கொள்கையாகும்.
“ …… ….. …. …… தத்தம்
இனத்து அனையர் அல்லர் எறிகடல் தண்சேர்ப்ப
மனத்து அனையர் மக்கள் என்பர்.” --- நாலடியார்..

அலை மோதுகின்ற கடலின்  குளிர்ச்சியான கரை  உடையவனே..! மனிதர் என்று சொல்லப்படுகிறவர், தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவர் அல்லர்;  தத்தம் மனத்தை ஒத்தவர். 

திங்கள், 25 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 661

திருக்குறள் – சிறப்புரை : 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.---- ௬௬௧
 ஒரு செயலைச் செய்து முடிக்கும் வல்லமை என்பது  ஒருவனின் மன வலிமையே ! ஒரு செயல் முற்றுப்பெற முன்னிற்பது மன உறுதி ஒன்றே ;  பிற செயல் திறன்கள் யாவும் பின்னிற்பவையே.
“ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.—குறள்.595.

நீர் நிற்கும் நிலைக்கேற்ப, நீர்ப்பூக்களின் தண்டு நீண்டு இருக்கும் அதுபோல மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 660

திருக்குறள் – சிறப்புரை : 660
 சலத்தால் பொருள்செய்து  ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.--- ௬௬0
நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டி அதனைப் பாதுகாத்தல் என்பது பச்சை மண் பானயில் நீரை ஊற்றிப் பாதுகாப்பது போலாகும்.
“ கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்.” –கலித்தொகை.
உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், மக்களப் பாதுகாக்க முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..


வெள்ளி, 22 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 659

திருக்குறள் – சிறப்புரை : 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ---
 பிறர் கண்ணீர்விட்டு அழுமாறு தீய வழிகளில் (ஊழல், கொள்ளை வணிகம், திருட்டு…) ஈட்டிய செல்வம் எல்லாம், தாம் கண்ணீர்விட்டுக் கதறி அழ அழத் தம்மைவிட்டு நீங்கும் ; நேர்மையான வழியில் தேடும் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும் பின்னாளில் நல்ல பலனையே தரும்.
” களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
 ஆவது போலக் கெடும்.” –குறள். 283.
 களவினால் உண்டான செல்வம் அளவுகடந்து பெருகுவது போலத் தோன்றி, அளவு கடந்து அழியும்.


வியாழன், 21 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 658

திருக்குறள் – சிறப்புரை : 658
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். ----
சான்றோர்களால் செய்யத்தகாதன என விலக்கி வைக்கப்பட்ட செயல்களைச் செய்யாது விலகி இருத்தல்  வேண்டும் ; மீறிச் செய்யத் துணிந்தால் அவை  வெற்றிகரமாக முடிந்தாலும் இறுதியில் துன்பமே தரும்.

“அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் இல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.” –நாலடியார்.
குற்றமற்றவர்கள் அறநெறியைப் பற்றி உரைக்கும் போது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.


புதன், 20 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 657

திருக்குறள் – சிறப்புரை : 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை .----
பழி சூழ்ந்த செயல்களைச் செய்து ஈட்டிய செல்வத்தைக் காட்டிலும் நன்னெறியில் வழாது வாழும் சான்றோர் துய்க்கும் வறுமை மேலானது.
“ அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ…” –பழமொழி.

அடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ..? விரும்பமாட்டார்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 656

திருக்குறள் – சிறப்புரை : 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.--
ஈன்ற தாய் பசியால் துன்புற்றாலும் (அதனைக் கண்டு வருந்திய மகன்) அத்துன்பத்தைப் போக்கும் பொருட்டுச் சான்றோர்களால் இகழ்ந்துரைக்கப்படும் செயலைச்  செய்யக்கூடாது.
“மடங்காப் பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்..” ----பழமொழி.

சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினாலும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.