வெள்ளி, 8 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –135 : 46. தொல்காப்பியம் – புள்ளி

தொல்தமிழர் அறிவியல் –135 : 46. தொல்காப்பியம்புள்ளி

மெய்யெழுத்துக்கள் :

   னகர விறுவாய்ப்
 பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப.” –( 9)

மெய்க்கு ஒலி அளவு :

மெய்யி னளபே அரையென மொழிப –( 11)
சார்பெழுத்துக்களுக்கு ஒலி அளவு :

அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே  - (12)
 மேற்கூறிய அரைமாத்திரையே.

 மகரக்குறுக்கம்

அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிடன் அருகுந் தெரியுங் காலை  -(13)
மகரமெய்க்கு ¼  மாத்திரை

 மகர மெய்யினது வரிவடிவம்:

உட்பெறு புள்ளி உருவா கும்மே – ( 14)
மகரம் உள்ளே புள்ளிபெறும்.

மெய்யெழுத்து வரிவடிவம் :

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்– (15)
க்,ங்,ச்,ஞ் ……….. என வரும்.

உயிர்க்குறில் ( புள்ளிபெறல் :

 எகர ஒகரத் தியற்கையு மற்றே – (16)
கார  ஓகாரம் புள்ளி பெறாது
 மேற்குறித்துள்ள நூற்பாக்கள் புள்ளியின் ஆற்றலைத் தெற்றென விளக்குகின்றன. தமிழ் எழுத்துக்களில் புள்ளியின்றேல் மொழி இயங்கும் ஆற்றல் அற்றதாகிவிடும்

                                     இப்புள்ளியின் வடிவம் இன்று சிறிய புள்ளியேபழந்தமிழர் மெய்யெழுத்திற்கு இட்ட புள்ளி ( புள்புள்ளி ; புள்சிறு கட்டை) நீண்ட இலிங்க உருவானதேஎன்கிறார் பா.வே. மாணிக்கநாயக்கர். புள்ளி என்பது ஒரு சிறு குறியீடு ,அது எழுதுபொருளுக்கேற்ப மாறுபடுதல் இயல்பு. புள்ளி, எழுத்தின் மேலிடும் பொட்டுக்குறி, குத்துக்குறி அல்லது சுழிக்குறி எனப் பல உள. தொல்காப்பியர் மெய்யெழுத்துக்களைப் புள்ளி, மெய், ஒற்று என்று மூன்று குறியீடுகளில் குறிக்கிறார்.தொல்காப்பியர் புள்ளியின் ஆற்றலை உணர்த்தவே மெய்மயங்கியல் என்னாது புள்ளி மயங்கியல் என்றார்.

எழுத்துக்களின் ஒலி அளவு

குறில்ஐந்தும் – 1 மாத்திரை
நெடில் ஏழும்  – 2   மாத்திரை
மெய்யெழுத்துக்கள் – ½ மாத்திரை
உயிர்மெய்குறில் – 1 மாத்திரை
உயிர்மெய்  - நெடில் - 2 மாத்திரை
உயிரளபெடை – 3  மாத்திரை
(கூடுதல் உண்டு)
சார்பெழுத்துக்கள் – ½  மாத்திரை   
மகரக்குறுக்கம் – ¼  மாத்திரை
                 
                           மாத்திரைஒலி அளவைக்குறிக்கிறது. சிந்துவெளி முத்திரைகளில் அரை மாத்திரையைக் குறிக்க ஒருபக்கக் கோடும் ; ஒரு மாத்திரையைக் குறிக்க இரண்டுபக்கக் கோடுகளும் ஆளப்பட்டுள்ளன. ( பேரா.இரா.மதிவாணன்)


புள்ளிக் கணக்கு
                      புள்ளி  - ஒலி அளவைக் குறைக்கவும் ஒலியை வேறுபடுத்தவும் அமைந்த, ஓர் அறிவியல் நெறியாகும். இச்சீரமைவு தமிழ்மொழிக்கே உரிய சிறப்பாகும். தமிழி (பிராமி) யிலிருந்து வளர்ச்சிபெற்ற மொழிகளில் புள்ளியெழுத்துக்கள் உள்ளன. எனினும் தமிழ் எழுத்துக்களின் இசையையோ ஒழுங்கையோ கணக்கையோ அவை கொண்டிருக்கவில்லை.
                       
                             தமிழி கி.மு.300 – பிராமி அராமைக் மொழியின் வழிவந்தது இல்லை. அது இந்தியாவில் தோன்றிய சிந்துவெளி எழுத்துக்களின் வழியில் வளர்ந்த ஓர் உள்நாட்டு மொழியைச் சார்ந்தது ; ஆனபடியால் பிராமி லிபியும் அதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பார் ஹீராஸ். --பி.இராமநாதன்.   
                           
                        பிராமி எழுத்துக்களில் சிறுகோடு , சிறு குத்துக்கோடு , புள்ளி, சுழி ஆகியன இடம்பெற்றுள்ளன. இக்குறியீடுகளைத் தமிழோடு ஒப்பிட்டு நோக்கினால்  தமிழின் பண்பட்ட வளர்ச்சி நிலையை அறியலாம். கி.மு. 1500க்கு முன்பே தமிழி எழுத்துக்கள் சிந்துவெளிப் பட எழுத்திலிருந்து வளர்ந்தவையாக எடுத்துக்காட்டுகிறார் பேரா. இரா. மதிவாணன். -----தொடரும்.......

1 கருத்து:

  1. பள்ளிக்காலத்தில் படித்ததை தற்போது கூடுதலாக இப்பதிவில் கண்டேன். நன்றி. ஆங்கிலச் சுருக்கெழுத்து கற்றபோது புள்ளியின் முக்கியத்துவத்தை அறிந்தேன். பின்னர் ஆங்கில சொல்லாடல்களில் ரசித்துள்ளேன். உதாரணம் Kumbakonam is dotted with so many temples.

    பதிலளிநீக்கு