ஞாயிறு, 3 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -50


தன்னேரிலாத தமிழ் -50

இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம்
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த
வாக்கினால் ஏரண்ட மாமுனியும் சோழனோடு
தேக்குநீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து.” ---நீதிவெண்பா.

நல்லவர்க்கும் நல்ல சொற்களையும் தீயவர்களுக்குத் தீய சொற்களையும் சொல்லல் வேண்டும் என்ற கொள்கையை மட்டும் பற்றாமல் காலம், இடம் முதலியவற்றிற்கும் ஏற்ற சொற்களை அவரவர்க்கும் கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறாததால்தான் ஏரண்டர் என்னும் மாமுனிவர் சோழ மன்னனோடு தானும் நீர்த் தேக்கத்தில் வீழ்ந்து இறக்கும்படியாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக