வெள்ளி, 8 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -55


தன்னேரிலாத தமிழ் -55

அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாமடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. ---வாக்குண்டாம்.

கொக்கு, நீரோடும் மடை அருகில் நின்று நீரோடு செல்லும் சிறிய மீன்களை விட்டுவிட்டுப் பெரிய மீன் வரும்வரை காத்திருக்கும் அதுபோல, அடக்கம் உடையவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்ற எண்ணம் கொண்டு அவர்களை வெல்ல நினைக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக