தன்னேரிலாத தமிழ் -63
“மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ
உயிர்
செகுக்கும்
பாம்பொடும்
இன்னா
மரீஇப்
பின்னைப்
பிரிவு.”
---நாலடியார்.
விரும்பி
உயிரை அழிக்கும்
பாம்புடன்
ஆயினும் நட்புச் செய்து பின்னர்ப்
பிரிவது துன்பம் தருவதாம். ஆதலால், பலரொடும்
பலகால் தழுவிப் பழகியிருந்து, அவர்தம் இயல்பைத்
தன் இயல்புடன்
ஒப்பிட்டு
ஆராய்ந்து
பொன்னேபோல்
போற்றத்தக்கார்
நட்பினை கொள்வதே விரும்பத்
தக்கதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக