திங்கள், 11 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -58


தன்னேரிலாத தமிழ் -58

நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பல பிறப்புத் துன்பம் என்று ஒட்டி
அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்
பிறநெறி போர்க்கிற்பவர்.”---- அறநெறிச்சாரம்.

ஆராய்ந்து கூறுமிடத்து இப்புவியில் பல பிறப்புகள் எடுத்து அவற்றால் அளவற்ற துன்பம் அடைந்தோம் என்று தெளிவித்து, துணிந்து அறநெறியைக் கைவிடாமல் கொண்டு ஒழுகச் செய்து, ஒழுக்கத்தினை உணரும்படி செய்து, தீய நெறிகளிலிருந்து நீக்குபவர்களே நட்பினர் என்று கூறப்படுவதற்கு உரியவர் ஆவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக