தன்னேரிலாத தமிழ் -61
”அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.” ---வாக்குண்டாம்.
நீர்
வற்றிய குளத்தில்
இருந்து நீங்கிச்
செல்கின்ற பறவைகள்
போல
, வறுமையுற்ற காலத்தில்
நம்மைவிட்டு விலகிச்
செல்பவர்கள் உறவினர்கள்
அல்லர்; நீரற்ற குளத்தில் உள்ள அல்லி, கொட்டி, நெய்தல் ஆகிய பயிர்கள் போல
விலகாமல் சேர்ந்திருந்து
இன்ப
துன்பங்களில் பங்குகொள்பவர்களே
உறவினர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக