சனி, 23 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 70


தன்னேரிலாத தமிழ் - 70

பெற்று அமையும் என்னாப்  பெரியோரும் பெற்ற பொருள்
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல்
மானம் இலா இல்லாளும் மானம் உறும் வேசியரும்
ஈனம் உறுவர் இவர்.” ---நீதிவெண்பா.

பெற்றிருக்கும் பொருளை போதுமென்ற மனம் பெறாத பெரியோர்களும் மேலும் மேலும் பொருள் ஈட்டி குடிமக்களைக் காப்பாற்ற வேண்டியிருந்தும் குறைந்த அளவு பொருளோடு நிறைவு அடையும் வேந்தனும் நாணம் இழந்து வாழும் குடும்பத்தலைவியும் பெற்றிருக்கக் கூடாத நானத்தைப் பெறும் பொதுமகளிரும் தாழ்வு அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக