திங்கள், 4 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -51


தன்னேரிலாத தமிழ் -51

ஆசைக்கு அடியான் அகில லோகத்தினும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே ஆசை
தனை அடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனை அடிமை கொண்டவனே தான்.—நீதிவெண்பா.

ஆசைக்கு அடிமையாகின்றவன் உலகத்திற்கு அடிமையாவான் ; ஆசையை அடக்கிக் கொள்பவன் உலகம் முழுவதையும் தனக்கு அடிமையாக்கிக் கொள்வான். எனவே அவாவினை அடக்குதல் நன்றாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக