தன்னேரிலாத தமிழ் -66
”மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பாரேல்
உற்றார் உலகத் தவர்.” –நல்வழி
மரங்கள் கனிகளைக் கொடுக்கின்றபோது
யாரும் கூவி அழைக்காமல் வெளவால்கள் தாமே வந்துசேரும்; பசுக்கள்
தம் கன்றுகளுக்குக் காலம் அறிந்து பால் கொடுத்துப் பசி தீர்க்கும்; அதுபோல் தன்னை நாடி வந்தவர்களுக்கு மறைக்காமல் இருக்கின்ற பொருளைக் கொடுத்துத் துன்பம் தீர்த்தால் உலகத்தார் யாவரும் உறவினர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக