தன்னேரிலாத தமிழ் -65
“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றலால் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.” –நல்வழி.
தண்ணீரின் சுவை அது தேங்கும் நிலத்தாலும், கொடைப் பண்பினால் வறியோரைக் காக்கும் பண்பினால் நல்லவர்களையும்,
அருள் தன்மையினால் கண்ணின் தன்மையினையும் , கற்பு நெறியால் பெண்களின் சிறப்பையும் அறியலாம். இவை அனைத்தும் உலகில் உயர்வாகப் போற்றத்தக்க செயல்களாகும்.
அருமையான சிந்தனைகள் ஐயா...!
பதிலளிநீக்கு