ஞாயிறு, 10 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -57


தன்னேரிலாத தமிழ் -57

மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறிய என்று இருக்க வேண்டாகடல் பெரிது
மண் நீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
 உண் நீரும் ஆகிவிடும்.”—வாக்குண்டாம்.

தாழை மடல்கள் பெரிதாக இருந்தாலும் மணம் தருவது கிடையாது, ஆனால் அதன் மலர் இதழ்கள் சிறியதாயினும் மணம் கமழும் ; கடல் பெரிய நீர் வளம் உடையதாயினும் உடலைத் தூய்மை செய்யப் பயன்படாது . ஆனால் கடல் அருகே மணல் வெளியில் தோண்டப்பட்ட ஊற்றில் கிடைக்கும் நீர்  அருந்துவதற்குச் சுவையுடையதாகும். அதனால் உடல் தோற்றத்தைக்கொண்டு எடை போடுதல் கூடாது.

2 கருத்துகள்: