சனி, 9 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -56


தன்னேரிலாத தமிழ் -56

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.”நல்வழி.

யானையின் உடலை ஊடுருவிப் பாய்ந்த  கூர்மையான அம்பு, பஞ்சில் பாய்ந்து ஊடுருவாது ; இரும்பால் செய்த கடப்பாரைக்கு உடையாத  கடிய கருங்கல் பாறையைப் பசுமையான மரத்தின் வளர்கின்ற வேர் உடைக்கும். அதுபோல எக்காலத்திலும் கடுமையான சொற்கள் இனிமை உடைய சொற்களை வெற்றி கொள்ள இயலாது.

1 கருத்து: