திருக்குறள்
– சிறப்புரை : 343
ஐந்தடக்கல்
அடல்வேண்டும்
ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. – 343
துன்பங்கள்
ஒழிய துறவறம் நாடின் ஐம்புலன்கள் வழி நுகரப்படும் சுவைகளை (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்) வெறுத்து ஒதுக்கவேண்டும்
; இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டுவன அனைத்தையும் ஒருசேர விட்டொழிக்க வேண்டும்.
பற்றற்ற
நிலை எய்த…. பற்றிய எல்லாவற்றையும் முற்றாக விட்டொழி.