திருக்குறள் -சிறப்புரை
:1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். --- ௧0௯௫
என்னை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று பார்க்கவில்லையானாலும் காதல்
குறிப்புடையவள் போலக் கடைக்கண்ணால் பார்த்து
மென்னகை புரிவாள்.
“மலிபெயல் கலித்த மாரிப்
பித்திகத்துக்
கொயல் அரும் நிலைய பெயல்
ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை
மழைக்கண்
தளிர்ஏர் மேனி மாஅ யோயே.
“ ---அகநானூறு.
மிக்க மழையில் தழைத்த, மாரிக்
காலத்துப் பூப்பதாய பித்திகத்தின் , கொய்தல் இயலா நிலைமையையுடைய, மழைக்கு எழுச்சி பெற்ற
மணம் தங்கிய அரும்பின் சிவந்த பின்புறத்தை ஒக்கும், வளவிய குளிர்ந்த கடைக்கண்ணினையும்,
தளிரை ஒத்த அழகிய மேனியையும் உடைய மாமை நிறைத்தை உடையவளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக