ஞாயிறு, 20 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1112


திருக்குறள் -சிறப்புரை :1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. ------ ௧௧௧௨

நெஞ்சே..! இவளுடைய கண்கள் பலரும் பார்க்கும் மலர்களை ஒத்திருக்கும் என்று  மற்ற மலர்களைக் காணும் போதெல்லாம்  மயங்கி நிற்கின்றாயே…!

கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெற
பொடியழல் புறந்தந்த பூவாப் பூம்பொலன் கோதை
தொடிசெறி யாப்பமை அரிமுன்கை அணைத்தோளாய்.” –கலித்தொகை.

கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீர் இன்றியே அழகுபெற்றன போல, பொடியுடைய நெருப்பிலே இட்டுச் செய்த பூவாத பூக்களைக் கொண்ட, பொன்னாலாகிய கோதையினையும் தொடி செறிந்த கட்டுவடங்களை அணிந்த அழகிய முன்கையினையும் அணைபோலும் மெல்லிய தோள்களையும் உடையாய்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக