திருக்குறள்
-சிறப்புரை
:1104
நீங்கின்
தெறூஉம்
குறுகுங்கால்
தண்ணென்னும்
தீயாண்டுப்
பெற்றாள்
இவள். ----- ௧௧0.௪
காதல் களிப்பில் , இவளை விட்டு நீங்கினால் உடம்பு சுடுகின்றது
; அணைப்பினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய
நெருப்பினை இவள் எங்கே பெற்றாள்..?
“மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம்
கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே.” ---குறுந்தொகை.
நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அரியப்படாத, அணுகுதற்கு அரிய பொதிய மலையில் உள்ள,
தெய்வங்களை உடைய பக்கத்தில் வளர்ந்த, சந்தனத்தைப்
போல, வேனிற் காலத்தில் இவள், குளிர்ச்சி
உடையாள் ; பனிக்காலத்தில் அடக்கிக் கொண்ட சூரியனுடைய கதிர்கள்
மறைய குவிந்து, அழகாக அசைகின்ற வெயிலை , உட்பொதிந்த தாமரை மலரின் உள்ளிடத்தைப் போன்ற சிறிய வெம்மை உடையாள்.
இதனால் தலைவி எக்காலத்தும் அணைதற்கு இனியள் ஆனாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக