செவ்வாய், 8 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1100


திருக்குறள் -சிறப்புரை :1100

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. ----- ௧௧00

காதலர்தம் கண்கள் காதல் குறிப்பொடு,  ஒருங்கேஇணைந்து மனம் களிக்குமானால் ,  காதல் உணர்வினைப் பரிமாறிக்கொள்ள வாய்ச் சொற்கள் பயனற்றவையாகும்.

எண் அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். –கம்பராமாயணம்.

அழகின் எல்லை இதுதான் என மனத்தால் நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, மாடத்தின்கண் நின்றபொழுது, ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக்கொண்டு, ஒன்றை ஒன்று ஈர்த்து இன்புறவும்  இருவரது உணர்வும் (தத்தம் இடங்களில்) நிலைபெற்று இருக்காமல் (ஒன்றையொன்று கூடி) ஒன்றுபடவும் அண்ணலும் (இராமன்) நோக்கினான் அவளும்  (சீதை) நோக்கினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக