வியாழன், 10 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1102


திருக்குறள் -சிறப்புரை :1102

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத்  தானே மருந்து. ---- ௧௧0.

நோயுற்றவர்க்கு நோய்க்கான மருந்தை மருத்துவர் அளிப்பர் ; ஆனால், அழகிய நகையணிந்த இப்பெண்ணால் உண்டான காமநோய்க்கு  அவள்தான் மருந்தாவாள்.

இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
 தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே.” –நற்றிணை.

இருள் நீங்கும் விடியற் காலத்து விருப்பத்தோடு வந்து, உடுக்கும் தழையும் சூடும் மாலையும் இவன் தந்தான் என்று அழகிய நகையணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு, என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத் திங்களிலே குளிர் நீராடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யானுற்ற நோயைத் நீக்கும் மருந்தாக அமைந்துளாள் ; அவள் அல்லது பிறிதொரு மருந்தும் இல்லை காண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக