சனி, 5 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1097


திருக்குறள் -சிறப்புரை :1097

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. ---- ௧0௯௭

மனத்தில் பகையின்றிக் கூறும் கடுஞ்சொல்லும் ; சினம் கொண்டவரைப்போன்று பார்த்தலும்;  புறத்தே அயலார் போலக் காட்டிக்கொள்வதும் ; அகத்தே காதல் கொண்டவரின் குறிப்பாம்.

“ உள்ளிக் காண்பென் போல்வன் முள் எயிறு
அமிழ்தம் ஊறும் செவ்வாய்க் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.” ---குறுந்தொகை.

முள்ளைப்போன்ற கூரிய பற்களையும்  அமிழ்தம் ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும்  மணம் வீசுகின்ற அகிற்புகையும் சந்தனப்புகையும் மணக்கின்ற கருமணலைப்போலக் கரிய கூந்தலையும்  பெரிய அமர்த்த கண்களையும் உடைய தலைவியின்  புன்னகையோடு, செருக்கின பார்வையை, நினைத்துப் பார்ப்பேன் போல்வன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக