வெள்ளி, 18 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1110


திருக்குறள் -சிறப்புரை :1110

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. ---- ௧௧௧0

சான்றோர் நூல்களைக் கற்குந்தோறும் அறியாத புதிய செய்திகளை அறிந்துகொள்வதைப்போல, அழகிய அணிகலன்பொலிவு பெற அணிந்த இவளைப் புணருந்தோறும் காம இன்பம்  முன்னினும் சிறந்து புதுமையாகத் தோன்றுகிறதே,.

கடல்பாடு அவிந்து தோணி நீங்கி
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினும்
மாணிழை நெடுந்தேர் பாணிநிற்பப்
பகலும் நம்வயின் அகலானாகிப்
பயின்று வரும் மன்னே பனிநீர்ச் சேர்ப்பன்.” ----அகநானூறு.

குளிர்ந்த கடற்கரையையுடைய நம் தலைவன் , முன்பு கடல் ஒலி அவிய, தோணி கடலில் செல்லாது நிற்க, மிக்க நீரினையுடைய பெரிய சுழியில் சுறா முதலியன செருக்கித் திரியினும், கொடிய வாயினராகிய பெண்டிர் அலர் தூற்றினும், சிறந்த இழையினையுடைய நீண்ட தேர் தாழ்த்து நிற்க, பகல் காலத்தும் நம்மிடத்து நின்றும் பிரியானாகிப் புணர்ந்து அடுத்தடுத்து வருவானே… !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக