திருக்குறள்
-சிறப்புரை
:1107
தம்மில்
இருந்து
தமதுபாத்து
உண்டற்றால்
அம்ம
அரிவை
முயக்கு. ---- ௧௧0.௭
அழகிய மாமை நிறத்தினை உடைய இவளை
புணர்ந்து துய்க்கும் இன்பமாவது, தன்னுடைய வீட்டிலிருந்து,
தன்னுடைய உழைப்பினால் ஈட்டிய பொருளைப் பலருடனும் பகிர்ந்துண்டு மகிழ்வதைப்
போன்றதன்றோ..!
“பல்லிதழ் மழைக்கண் மாஅயோள் வயின்
பிரியின் புணர்வதாயின் பிரியாது
ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே.”----அகநானூறு.
பொருள்கருதிப் பிரியின்…! எனது மனமே
, பல இதழ்களையுடைய மலர்போலும் குளிர்ந்த கண்ணினையுடைய, மாமை
நிறத்தனளாய தலைவியை
நீங்குதல் மறந்து, ஒன்றினொன்று பிரியாது
நெருங்கி நிமிர்ந்த முலைப்பரப்பு விம்மவும் சிவந்த அணிகள்
ஒலிக்கவும் பலமுறையும் தழுவி,
நாள்தோறும் தலைவியானவள் இல்வாழ்க்கைத் தொழிலொடும் மகிழும்படி நினைவாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக