திருக்குறள்
-சிறப்புரை
:1099
ஏதிலார்
போலப்
பொதுநோக்கு
நோக்குதல்
காதலார்
கண்ணே
உள.----- ௧0௯௯
முன்பின்
அறியாதவர்கள்
போலப் பருவ ஈர்ப்பினால்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதும்
காதலர் கண்ணே உள்ளதொரு
காதல் குறிப்பேயாம்.
” காமத் திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான. ----தொல்காப்பியம்.
களவொழுக்கத்தில்
நாணும் மடனும் அவள் கண்ணின்வழி
வெளிப்படுதலால், குறிப்பாலும்
சூழ்நிலையாலும்
உணர்த்துவாளே
அன்றி நேரடியாகத்
தன் விருப்பத்தைத்
தெரிவித்தல்
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக