திங்கள், 14 ஜனவரி, 2019


சல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை

              பகையைக் கொன்றொழித்து வென்றெடுக்க வேண்டுமென்றாலும் அறவழி நிற்கும் ஆற்றலுடையது மறத்தமிழினம். ஆண்மையிலும் வீரத்திலும் வாய்மை காக்கும் வல்லமை கொண்ட தமிழினம் போரிலும் அறம் போற்றும் பாங்கினை அறியாத மூடர்கள் காளை விளையாட்டைக் களங்கப்படுத்துகின்றனர்.

                    காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கழுதைகள் கத்துகின்றன .. நரிகள் ஊளையிடுகின்றனநாய்கள் குரைக்கின்றனபேய்கள் அலறுகின்றன.. ஏனிந்த நடுக்கம் ..? சிந்துவெளித் தமிழனின் சீரிளமைத் திறம் காணப் பொறுக்கவில்லை போலும்.

                   ஏறுதழுவல் என்பது காளையை அடக்குவதோ வீழ்த்துவதோ இல்லை…! காட்டாற்று வெள்ளமெனச் சீறிப்பாய்ந்துவரும் காளையைத் தழுவி அதன் கொம்பில். மஞ்சள் துணியில் முடிந்து வைக்கப்பட்ட சல்லிக்காசுகளை (பொற்காசுகள்) இளமையும் ஆண்மையும் பொருந்திய வீரன் ஒருவன் காற்றெனக் கடுகிக் காளையின் கொம்பில் கட்டப்பட்ட சல்லிக்காசு முடிச்சை பறித்தெடுப்பது மட்டுமே. இது ஒரு வீரவிளையாட்டு..!. சோம்பேறி விளையாட்டையெல்லாம் வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்த வீர விளையாட்டுகசக்கத்தான் செய்யும்..!
                       காளை வனவிலங்கன்று ; வீட்டு விலங்கு. பசுவைப் போற்றுவோர் காளையைப் போற்றவில்லையென்றால் அஃது இனச்சேர்க்கைக்கு எதிரானதன்றோ..? ஈவு இரக்கமின்றிக்  கன்றுக்குட்டியைக் கட்டிப்போட்டுவிட்டுப் பாலைக் கறந்து குடிப்பதைவிடவா காளை விளையாட்டு கொடுமையானது.? பசியால் அழும் குழந்தைக்குப் பால் வழங்காது குடம் குடமாக கோயிலில் கொட்டும் மூடர்கள் காளை துன்புறுத்தப்படுவதாகக் கண்ணீர் வடிக்கின்றனர். காளை வனவிலங்கு  : அதன் மனைவி பசு வீட்டு விலங்கா..?  காளை வனவிலங்கு துன்புறுத்தக் கூடாது என்றால்.. கோயில் யானைகள்.. காட்சிக்கூட விலங்குள்வித்தையரங்கு (சர்க்கஸ்) விலங்குகள் இன்னும் குரங்காட்டிகள் பாம்பாட்டிகள் இன்னபிறவும் தடை செய்யப்படவேண்டியவைதானே..?

Jallikattu–Bull Taming Sport in IndiaThe history of Jallikattu can be traced back to the Indus Valley Civilization, more than 5000 years ago, making it one of the oldest surviving tradition in the world. A well-preserved seal was found at Mohenjodaro in the 1930s which depicts the bull fighting practice prevalent during the Indus Valley Civilization

Historical references show that ‘jallikattu,' known in ancient times as ‘Yeru thazhuvuthal,' was popular among warriors during the Tamil classical period. The term ‘jallikattu,' comes from Tamil terms ‘salli kaasu' (coins) and ‘kattu' (a package) tied to the horns of bulls as prize money. Later, in the colonial period, this term changed to ‘jallikattu.' ---தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக