திருக்குறள்
-சிறப்புரை
:1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் ----- ௧௧
௨0
மிகவும் மென்மைத் தன்மை உடைய அனிச்சமலர் இதழும்
அன்னப் பறவையின் சிறகும் மண்மகள் அறிந்திலாத இவளின் வண்ணச் சீரடிகளுக்கு, நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள முள், தைப்பதைப் போன்ற துன்பத்தைத் தரும்.
“இம்மென் பேரலர் நும்மூர் புன்னை
வீமலர் உதிர்ந்த தேனாறு புலவின்
கானல் ஆர்மணல் மரீஇக்
கல்லுறச் சிவந்த நின் மெல்லடி உயற்கே. “ -----நற்றிணை.
மெல்லிய பெரிய அலர் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண்
உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக உதிர்ந்த்தினாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய
கழிக்கரைச் சோலையின் மிக்க மணலிடத்தே நடந்து,
இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாது
இருத்தற் பொருட்டு…. ஆலின் நிழலில் தங்கிச் செல்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக