திருக்குறள்
-சிறப்புரை
:1121
113. காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
-------- ௧௧ ௨௧
மென்மையான இனிய மொழிபேசும் இவளுடைய வெண்மையான
பற்களில் ஊறிய நீரானது பாலொடு தேன்கலந்த சுவையினைப் போன்றதாகும்.
‘கிளி புரை கிளவியாய்…’
“ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்
நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர்
யாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான்…..” ----கலித்தொகை.
கிளியின் பேச்சினைப் போலப் பேசும் மொழியினை உடையாய்…..!
இதழ்க்கடையிலே அமிழ்தத்தைப் போன்ற வாயூறல் ஊறும்
பல் வரிசையினை உடையாய்; சுரத்திடைச் செல்லும்போது.
நீர் உண்ணலை நீ விரும்பிக் கேட்பின், வழியிடை நீர்
இல்லை என்று அறத்தைக் கூறினீர் ; ஆறு நீர் கழிந்தால் போன்று இளமை
கழிந்து போகும் தன்மை உடையது ; நும்முடைய நெஞ்சம் என்கின்ற தெளிந்த
நீரைப் பெற்றிருப்பவள் யான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக