திருக்குறள்
-சிறப்புரை
:1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. ----- ௧௧ ௨.௨
இம்மடந்தையொடு எனக்கு உண்டான காதலானது,
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு எத்தன்மை உடையதோ அத்தன்மையினை உடையதாகும்.
“உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே.” –அகநானூறு.
நெஞ்சே…!
உடலோடு உயிர் ஒன்றினால் போன்ற நட்பினையும் அவ்வுயிர் இன்புற்று வாழ்தல்
போலும் காதலையும் உடைய தலவிக்குச் சாதல் போலும் துன்பத்தைத் தருமே, பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக