புதன், 16 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1108


திருக்குறள் -சிறப்புரை :1108

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.----- ௧௧0.

தலைவன், தலைவி இருவர்க்கும் இடையில் காற்று நுழையாதபடி ஒருவரையொருவர் தழுவிப் புணர்தல்  காதல்கொண்ட இருவருக்கும்   இனிமை தருவதாகும்.

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காம்மொடு
உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து
இருவே மாகிய உலகத்து
ஒருவே மாகிய புன்மை நாம் முயற்கே.” ----குறுந்தொகை.

செய்யத்தகும் முறையை அறிந்து, பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாகி இருவேமாகப் பயின்றுவந்த இவ்வுலகத்தில், பிரிவால் ஒருவராகிய துன்பத்தினின்றும் நாம் நீங்கி, மகன்றில் இணை நீந்தி வரும் பொழுது ,பூவானது தம் இடையே பட்டாலும், அப்பொழுது பல ஆண்டுகள் கடந்தால் போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையை உணரும், நீரிலே வாழ்கின்ற மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப்போலப் பிரிதல் அறியாத, நீங்காத காமத்தோடு ஒருங்கே எம் உயிர் போகுவனவாகுக என்றாளாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக