திருக்குறள்
-சிறப்புரை
:1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
----- ௧௧0.௯
காதலர் தம்முள் ஊடிக்கொள்ளலும் அதனை நீளவிடாது நீக்கிக்கொள்ளலும்
பின் புணர்ந்து மகிழ்தலும் இவையே காம விருப்பை முற்றும் எய்தியவர்கள்
பெற்ற பயன்களாகும்.
“ முயங்காக்கால் பாயும் பசலை மற்று
ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் – வயங்கு ஓதம்
நில்லாத் திரை அலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்பது ஓர் ஆறு. “ ---நாலடியார்.
விளங்குகின்ற கடலானது ஓயாமல் அலைகளால் மோதுகின்ற
நீண்டகழிகளின் குளிர்ச்சியான கரையை உடைய அரசனே..!
தலைவியைப் புணராது போனால் அவள் உடம்பில் பசலை நோய் பரவும் ; ஊடல் கொள்ளாதபோது காமம் இன்பமளிக்காமல் போகும் ; புணர்ந்தும்
ஊடல்கொண்டும் மகிழ்வது புணர்ச்சிக்கு ஓர் நன்னெறியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக