சனி, 2 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1125


திருக்குறள் -சிறப்புரை :1125

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.---- ௧௧ ௨ ௫

ஒளிபொருந்திய காதல் போர்புரியும் கண்களை உடைய  என் காதலியாகிய இவளின் சிறப்பான குணங்களை நான் நினைத்துப் பார்ப்பேன் ; ஆனால் நான் மறந்தால்தானே நினைத்துப்பார்க்க..! ஒருபோதும் மறத்தலை அறியேன் ஆதலால் நினைத்தலையும் அறியேன்.

குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி ஒழிய
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.” –குறுந்தொகை.

நெஞ்சே…! குன்று சூழ்ந்த சிறிய வழிகள் கடத்தற்கு அரியன என்று எண்ணாமல், மறத்தற்கரிய காதலி இங்கே தங்கியிருக்க, நாம் செல்வோம் என்று துணிவது,   நம் இளமைப்பருவத்துக்கு முடிவாகும்.
இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன், என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக