ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1138


திருக்குறள் -சிறப்புரை :1138

நிறையறியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். ----- ௧௧ ௩௮

பெண்கள் காம விருப்பை அடக்கியாளும் நிறைகுணம் உடையவர்கள்; இரக்கம் உடையவர்கள். எனினும் மனத்துள் மறைந்து உறைந்த காமவிருப்பு எல்லைகடந்து, பலர் அறிய பொதுவில் வெளிப்பட்டுவிடுகின்றது.

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.” ---குறுந்தொகை.

சுழன்று அசைந்துவருகின்ற தென்றல் காற்று மிகவும் வருத்த, என்னை வருத்தும் காமநோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான் முட்டுவேனோதாக்குவேனோஆ என்றும் ஓல்லென்னும் ஒலி உண்டாக,அரற்றுவேனோஇன்னது செய்வது என்பதை அறியேன், என்றாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக