செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1140


திருக்குறள் -சிறப்புரை :1140

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. ---- ௧௧௪ 0

காமநோயால் யான் படும் துன்பங்களைத் தாம் துய்க்காத காரணத்தால் , அறிவற்றவர்கள் என் கண் முன்னே, என்னைப்பார்த்துச் சிரிக்கின்றனர்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆண்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.” ---குறுந்தொகை.

காமம் காமம் என்று உலகினர் குறைகூறுவர் ; காமமானது, புதியதாய்த் தோற்றும் வருத்தமும் நோயுமன்று ; அது நுண்ணிதாகி மிகுதலும் குறைதலும் இலது ;   யானை தழை உணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப்போலக்  காணற்குரியவரைக் கண்டு மகிழ்வாரைப் பெற்றால், காமம் வெளிப்படும் தன்மை உடையதன்றோ…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக