ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1126


திருக்குறள் -சிறப்புரை :1126

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியரெங் காத லவர். ---- ௧௧ ௨௬

என் கண் உள்ளிருந்து போகமாட்டார் ; அறியாமல் இமைத்தேனானாலும் அதற்காக  வருந்தவும் மாட்டார்; கண்ணுள் குடியிருக்கும் நுட்பமானவர் என் காதலர்.

துனிநீர் கூட்டமொடு துன்னாராயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்.” –நற்றிணை

புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும்  அவர் மெய் நோக்கி மகிழ்ந்தேன்; அங்ஙனமாக நோக்கியிருந்தாலும் உயிரொடு வாழ்வது இனியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக