திருக்குறள்
-சிறப்புரை
:1143
உறாஅதோ
ஊரறிந்த
கெளவை
அதனைப்
பெறாஅது
பெற்றன்ன
நீர்த்து. ---- ௧௧௪ ௩
ஊரார் தூற்றும் அலர் என்னைப் பற்றாது ஒழியுமோ..? அலரால்
தலைவியோடு கூடப்பெறாமையால் வருந்திய எனக்கு, அந்த அலரே பெறமுடியாததைப்
பெற்றதுபோன்ற இன்பத்தைத் தருகின்றது.
“கொழுங்கண் அயிலை பகுக்கும்
துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை
முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல்
தூற்றப்
பலரும் ஆங்கறிந்தனர் மன்னே
இனியே
வதுவை கூடிய பின்றை…………..
……………………………
ஒலியவிந்தன்று இவ்வழுங்கல்
ஊரே.” ---அகநானூறு
கொழுவிய கண்களை உடைய அயிலை
மீனை யாவர்க்கும் பகுத்துக்கொடுக்கும் துறைவன், நம்மொடு புணர்ந்த காதல் நட்பு முன்பு, அலர் கூறும் வாயினையுடைய
பெண்டிர் அம்பலமாக்கிப் பரப்ப, அவ்விடத்து நம் காதலை பலரும் அறிவாராயினர். இப்பொழுது மணம் கூடிய பிறகு, ஆரவாரமுடைய இவ்வூர் ஒலி
அடங்கப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக