சனி, 16 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1137


திருக்குறள் -சிறப்புரை :1137

கடலன்ன காமம்  உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல். --- ௧௧ ௩௭

அல்லும் பகலும் உறங்காது ஆரவாரிக்கும் கடலைப்போலக் காமநோயினால் துன்புற்றாலும் நாணம் அழியுமே என்று அஞ்சி, பெண்கள் மடலேறுவதில்லை ; பெண்கள் ஆற்றியிருக்கும் பொறுமை என்னும் பெருமையால்,  பெண்மையைப்போல் சிறந்தது வேறு ஒன்றில்லை.

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான.” ---தொல்காப்பியம்.

கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய் ஏழன்கண்ணும் தலைவி மடலேறினாள் எனக் கூறும் புலனெறி வழக்கம் பொலிவுடைமையின்று, ஆதலான் அது கூறப்படாது என்றவாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக