புதன், 6 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1129


திருக்குறள் -சிறப்புரை :1129

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலார் என்னும்இவ் வூர்.----- ௧௧ ௨ ௯

என் காதலர் கண்ணுள்ளே இருப்பதால், இமைப்பொழுதும் மறைதலை அறிந்து , இமைக்காமல் இருப்பேன். யான் இமையாதிருத்தலைக் கண்ட இவ்வூரார், இவளுக்குத் தலைவன் தூங்காத நோய் செய்தான் என்று கூறுகிறார்கள்.

கனைஇருங் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என் அவலம் உறு நெஞ்சே.” –நற்றிணை.

தலைவனிடம் கொண்ட மிகுந்த அன்பினாலே, ஆற்றாமையால் வருந்துகிறேன் ; தூக்கம் இல்லை ; இவ்வுலகம் என்னோடு போரிடுகிறதோ அல்லது இவ்வுலகத்தோடு என் அவல நெஞ்சம் போரிட எழுகின்றதோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக