திருக்குறள்
-சிறப்புரை
:1148
நெய்யால்
எரிநுதுப்பேம்
என்றற்றால்
கெளவையால்
காமம்
நுதுப்பேம்
எனல். ------ ௧௧௪ ௮
ஊரார் தூற்றும் அலரால் காமத்தை அடக்கிவிடாலாம் என்று
எண்ணுவது ; எரிகின்ற தீயை நெய் விட்டு அணைப்பதைப்
போன்றது.
“அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார்கொல் மருள் உற்றனம்
கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர்
எழவே.” ---ஐங்குறுநூறு.
தோழி...வாழி..! என் சொல்லைக்கேள், மூங்கில் புதரில் பற்றிய
தீயைப் போல, ஊரில் அலர் எழும் வண்ணம்
நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் காதலர் நம்மை நினையாரே..? அன்றி, நாம் தாம் அவர் குறித்துச்சென்ற பருவம்
வாராததாகவும் வந்ததாக மயங்கினோமா.....சொல்வாயாக...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக