செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1128


திருக்குறள் -சிறப்புரை :1128

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. ---- ௧௧ ௨௮

எம் காதலர் என்றும் நீங்காது எம் நெஞ்சில் நிறைந்திருப்பதால், அவரைச் சூடு துன்புறுத்துமே  என்று கருதி சூடானவற்றை உண்ண அஞ்சுகிறேன்.

துறுகல் அயலது மாணைக் கொடி
துஞ்சுகளி களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களனாக நீயலென் யான் என
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ தோழி நின்வயினான.” –குறுந்தொகை.

உருண்டைக் கல்லின் அயலில் உளதாகிய மாணை என்னும் பெரிய கொடியானது, தூங்குகின்ற களிற்றின்மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டுக்குத் தலைவன். நின் நெஞ்சு இடமாக இருந்து, பிரியேன் என்று  எனது அழகிய தோளை அணைந்த பொழுது, அத்தலைவன் கெடாத உறுதிமொழியைக் கூறியது, நினக்கு வருத்தம்தரக் காரணமாகுமோஆகாதன்றே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக