திருக்குறள்
-சிறப்புரை
:1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. ----- ௧௧
௩௯
யான்,
காமவிருப்பை வெளிக்காட்டவில்லை
யாதலால் என்னை எல்லாரும் அறியவில்லை ; இனி எல்லாரும் அறியும்படியாக,
என் காமவிருப்பு இவ்வூரின் தெருவில் வெளிப்பட்டு மயங்கிச் சுழல்கின்றது.
”நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விளங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே. “ –குறுந்தொகை.
தோழி..!
நம் தலைவர், நிலத்தின் உள்ளே புகார் ; வானத்திலும் ஏறார் ; பெரிய கடலின்மீது காலினால் நடந்தும்
செல்லார் ; நாடுகள் தோறும் ; ஊர்கள்தோறும்
; வீடுகள்தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரோ..? ( உறுதியாகக் கிடைப்பார் என்றாளாக.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக