புதன், 13 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1134


திருக்குறள் -சிறப்புரை :1134

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. --- ௧௧ ௩ ௪

 காம வேட்கையைக் கடப்பதற்கு  நான் கொண்டிருந்த நாணம் என்னும் நற்குணம் பொலிவுபெற்ற ஆண்மை ஆகிய தெப்பங்களைக் காமக் கடும்புனல்   அடித்துக்கொண்டு போயிற்று.

விழுத்தலைப் பெண்ணை வினையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளத் தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ.” ---குறுந்தொகை.

நெஞ்சே..! உயர்ந்த உச்சியை உடைய பனையின் முதிர்ந்த தலை  உடைய பெரிய மடலால் செய்த குதிரைக்கு, மணிகள் கோர்த்த பெரிய மாலையை, முறையாக அணிவித்து, நாம்  வெள்ளிய எலும்பை அணிந்து கொண்டு, பலரும் இகழும்படியாக ஒரு நாளில் சிறந்த நாணத்தைவிட்டுத் தெருவின்கண் செல்லலும் தருவதோ..? நான் இனி மடலேறுவேன் என்றானாக.

1 கருத்து: