சனி, 9 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1132


திருக்குறள் -சிறப்புரை :1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. ----- ௧௧ ௩

கூடுதல் அரிதானதால், வருத்தும் துன்பத்தைத் தாங்க இயலாத உடம்பும் உயிரும் நாணத்தை விட்டொழித்து மடல் ஏறத் துணிந்தனவே.

வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முறுவல் எனப் பல்லூர் திரிதரும்
நெடுமாப் பெண்ணை மடல் மானோயே.”நற்றிணை.

நெஞ்சே…!  விலைக்கு விற்க இயலாத பூளை மலரையும் உஞிஞைப் பூவையும் எருக்கம் பூவையும் ஆவிரம் பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி, யான் நல்ல பித்தேறினேன் என்னும்படி, பல ஊர்களிலும் சென்று, நெடிய கரிய பனை மடலாலே கட்டிய குதிரையை உடையன் என,  தான் மடலேறி வந்ததனைத் தோழிக்கு அறிவுறுத்தினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக